நேரம் ஒதுக்கி, கவனம் குவித்து, அத்தனை நுட்பங்களையும் அள்ளும் ஆவேசத்துடன் வாசிக்க வேண்டிய ஒன்று. ஒருவகையில் அதுவும் வேலைதான். அதற்குரிய அக்கறையுடன் புத்தகங்களை அணுகுங்கள். எந்த நூலையும் முன்முடிவுகளற்று வாசியுங்கள், உங்களை முட்டாளடிக்க வேண்டுமெனும் நினைப்பில் எந்த மகத்தான படைப்பாளியும் கிளம்பிவரவில்லை என்பதை நம்புங்கள். இறுதியாக, வாசித்த புத்தகங்களைப் பற்றி சிறு குறிப்பெனும் எழுதுங்கள்.