வண்ண கலர் கோலப்பொடிகள், ஜிகினாக்கள், கோலப்புத்தகங்கள் சகிதமாக நடுஇரவில் வீட்டு முற்றத்தில் இறங்கி வெள்ளி முளைக்கும் வரை தெருவடைக்க கோலமிடுவார்கள். கோலத்தில் இறுதியில் இரண்டு பிழைகளுடன் ஹேப்பி பொங்கல் எழுதி ஒரு பயல் நடமாட முடியாதவாறு காவலுக்கு ஒரு சிறுமியையும் போட்டு விடுவார்கள்.