வல்லிக்கண்ணனின் அந்த கதையை வாசித்திராவிட்டால் நான் பைத்தியம் பிடித்துச் செத்திருப்பேன். அந்த வரி இல்லாமல் நான் கிருஷ்ணாபுரத்துக்கு வந்திருக்கவே மாட்டேன். புதுமைப் பித்தனை வாசித்திருக்கா விட்டால் திட்டிவாசல் எனும் சொல்லையே நான் கேள்விப்பட்டிருக்க மாட்டேன். வண்ணதாசனை வாசித்திருக்காவிட்டால் குறுக்குத்துறை ஆற்றில் வெள்ளம் பந்தல் மண்டபத்தைச் சூழ்ந்து ஓடுகையில் அதன் மேற்கூரையில் மீது பதைத்தபடி நிற்கும் ஆட்டுக்குட்டியை நான் மனக்கண்ணில் பார்த்திருக்கவே முடியாது.