More on this book
Kindle Notes & Highlights
தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற்போன்ற அவரது கண்களின் சுடர் அவரது வேறெந்த மாணவர்களிடமும் இல்லாதது. தவிரவும் அந்தச் சுடரின்மீது கவிந்துநின்ற விலை மதிப்பற்ற சாந்தம்.
மொழியின் ஆளுமை என்ற விஷயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு: உவமானம். வெய்யோனின் சுடர் இவரது கண்களில் ஒளிரும் சுடருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது எத்தனை அழகு!
கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகிவிட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக் களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து.
"கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகிவிட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக் களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து" - மொழி ஆளுமை - திருக்குறள் வரிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன!
புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு.
"புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு" - சொல்லாட்சி சுவை சேர்த்து நடனம் ஆடுகிறது ! தெளிவு என்ற சொல், அதன் பொருள், அதன் பரிணாமம் அனைத்தும் இந்த ஒரு வாக்கியத்தில்!
சாமானியர்கள் சித்தாந்தங்களால் கவரப்படுவதில்லை. அது அவர்களை முழுதாக எட்டுவதுமில்லை. ஒரு நம்பிக்கை. நாடி பிடித்துப் பார்க்கிற வைத்தியனின் முகக் கனிவு கொடுக்கிற நம்பிக்கை போன்ற ஒன்று.
வைத்தியன் மேல் நம்பிக்கை ! அதாவது அவனிடம் சரணாகதி! இங்கும் எங்கும் சரணாகதி தத்துவம் ! அடிப்படை அதுதான் என்பது வியாக்கியானம்