"இந்தக் கொழந்தைக்குச் சட்டைத்துணி வேணும். என்ன நிறமாக இருந்தாலும் தேவலை. 'சீப்பா' இருக்கணும்." பல ரகத்துணிகள் எங்கள் எதிரில் கலைத்துப் போடப்பட்டன. ஆனால் எதுவும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு மலிவானதாக இருக்கவில்லை. 'இதைவிட மலிவா எதுவுமில்லையா?' அவர் வியப்பை வெளிப்படுத்தினார். சீதாதேவியைப்போலப் பூமிக்குள் புதைந்து போய்விட வேண்டுமென்று விரும்பினேன். அந்தக் கணத்தைப் பற்றி இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் வேடிக்கையாக நினைவுகூர்ந்தேன். நான் மிகவும் நேசித்த ஒரு பணக்காரன் எனது பிறந்தநாளன்று என்னிடம் கூறினான்: 'உனக்கு நான் எதை வாங்கித் தருவது? வைரமாலையா? பட்டுப்புடவையா? உனக்குப் பரிசளிக்க
...more