கல்வியை நிறைவு செய்ய முடியாமல்போன எனக்கு சொற்களின் பற்றாக்குறை அனுபவப்படுவது இயல்பே. நான் இன்று ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதுகிறேன். ஆனால், குஷ்டரோகம் பாதித்தவனும் விரல்களை இழந்தவனுமான ஒருத்தன் தனது கைகள் என்னும் கட்டைகளால் தட்டச்சு செய்வதைப் போன்றதோ, கூடை முடைவதைப் போன்றதோ எனது இலக்கியப் படைப்பு. வார்த்தைகளுக்கான பற்றாக்குறை எனது கலையை வரையறுக்கிறது.