More on this book
Community
Kindle Notes & Highlights
உங்களுடையது அல்லாத சுகங்கள் எனக்கு இல்லை உங்களுக்குத் தெரியாத வேதனைகள் எனக்கு இல்லை நானும் 'நான்' என்ற பெயரால் அறியப்படுகிறேன். - - கமலா தாஸ்
இது என்னுடைய கதைதானே, நடந்த உண்மைகளை நான் சொல்லியிருக்கிறேன். அதே போல நடந்திருக்க வேண்டிய உண்மைகளையும் நானேதானே சொல்லியிருக்கிறேன்? என்னுடைய உண்மையைப் போலவே நான் சொன்ன பொய்களும் உண்மையானவை. அப்படிப் பொய் சொல்லவைத்தது நானில்லையே?'
ஒரு பெண் தனது முதல் கணவரை உதறிவிட்டு வேறோர் ஆணின் படுக்கைக்குச் செல்லும்போது அது முட்டாள்தனமாகவோ ஒழுங்கீனமாகவோ ஆகிவிடாது. அது குரூரமானது. அவள் அவமானப்படுத்தப்பட்டவள்; காயம்பட்டவள்; அவளுக்கு ஆறுதல் அவசியம்.
ஆரோக்கியம் மிகுந்த பெண்ணாக இருந்தபோது கலங்கிப் புரண்டோடும் நதியைப் போன்றிருந்தேன். எதையும் பணியவைக்கும் எனது ஆற்றலைப் பற்றிய உணர்வு எனக்கிருந்தது. எனது உதடுகள் இனிமை நிறைந்தவை என்றும் எனது மணம் வசீகரிக்கக் கூடியதென்றும் புரிந்துவைத்திருந்தேன்.
வாழ்க்கை ஒரு மந்திரஜாலம். அதைப் பருகப்பருக தாகம் அதிகரிக்கும்.
வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் உலகத்தில் ஒரு காலையும் இறந்தவர்களின் உலகத்தில் அடுத்த காலையும் வைப்பது என்பதே ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் முழுமையான நிலைப்பாடு. அப்போது அவன் சமநிலையை எய்துகிறான். அப்போது அகப்பார்வை வெகுஆழத்தை எட்டுகிறது. அஞ்சுவதற்கு எதுவுமில்லை. தேர்ந்தெடுப்பதற்கான உரிமை அவனுடையது. முயற்சித்தால் விரும்பும் இடத்தை நோக்கி அவன் நகர இயலும். ஆனால், இந்த இரண்டு உலகங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம். எனக்கு வேறு வழி இருக்குமென்றால், நிழல்களின் புலப்படாத வேறொரு உலகமோ ஒரு சந்திர உலகமோ அத்தகைய ஏதோ ஓரிடம் இருக்குமென்றால், நான் இப்போது அங்கு போயிருப்பேன். மற்ற
...more
நாம் மூன்று காலங்களைப் பற்றிய அறிவைப் பெறும்போதுதான் முக்கால ஞானிகளாகிறோம். மூன்று உண்மைகளை மட்டுமே நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பிறப்பு, நிகழ்காலத்தில் வாழ்க்கை, எதிர்காலத்தில் மரணம். இந்த உண்மைகளுக்கு அப்பால் எல்லையற்ற வெறுமை. அங்கு பொய்கள் பிசாசு வடிவங்களைப்போல அலைந்து திரிகின்றன.
புலனடக்கம் என்ற வழியிலும் கூட்டுப்பணி என்கிற புள்ளியிலும் மட்டுமே தங்களுக்கு மீட்சி இருப்பதாக எனது பெற்றோர் கருதினர். அந்த நம்பிக்கை என்னிடம் இல்லாமல் போனதால்தான் எனது கால்தடங்கள் தரையைவிட்டு உயர்ந்தன. வானத்தில் மேகங்களுடன் திரிவதற்கும் பாதாளச் சேற்றில் களைப்புற்று விழுவதற்கும் என்னால் முடிந்தது.
ஆத்மார்த்தம் இல்லாமல் சராசரி இலக்கியப் படைப்புகள் மனத்தில் உருவாக்கும் தளைகள் இவர்களைப் பாதிப்பதில்லை.
கட்டுப்படுத்த முடியாத கண்ணீரும் தோலின் பழுப்புநிறமும் என்னை அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து அந்நியப்படுத்தின.
கல்வியை நிறைவு செய்ய முடியாமல்போன எனக்கு சொற்களின் பற்றாக்குறை அனுபவப்படுவது இயல்பே. நான் இன்று ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதுகிறேன். ஆனால், குஷ்டரோகம் பாதித்தவனும் விரல்களை இழந்தவனுமான ஒருத்தன் தனது கைகள் என்னும் கட்டைகளால் தட்டச்சு செய்வதைப் போன்றதோ, கூடை முடைவதைப் போன்றதோ எனது இலக்கியப் படைப்பு. வார்த்தைகளுக்கான பற்றாக்குறை எனது கலையை வரையறுக்கிறது.
"இந்தக் கொழந்தைக்குச் சட்டைத்துணி வேணும். என்ன நிறமாக இருந்தாலும் தேவலை. 'சீப்பா' இருக்கணும்." பல ரகத்துணிகள் எங்கள் எதிரில் கலைத்துப் போடப்பட்டன. ஆனால் எதுவும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு மலிவானதாக இருக்கவில்லை. 'இதைவிட மலிவா எதுவுமில்லையா?' அவர் வியப்பை வெளிப்படுத்தினார். சீதாதேவியைப்போலப் பூமிக்குள் புதைந்து போய்விட வேண்டுமென்று விரும்பினேன். அந்தக் கணத்தைப் பற்றி இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் வேடிக்கையாக நினைவுகூர்ந்தேன். நான் மிகவும் நேசித்த ஒரு பணக்காரன் எனது பிறந்தநாளன்று என்னிடம் கூறினான்: 'உனக்கு நான் எதை வாங்கித் தருவது? வைரமாலையா? பட்டுப்புடவையா? உனக்குப் பரிசளிக்க
...more
மிகவும் எளிமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க என் பெற்றோர்களுக்குக் கற்றுத்தந்த மகாத்மா காந்தியை மௌனமாகச் சபித்தேன்.
நான் அன்று காதலைப் பைத்திய மாகவும் நோயாகவும் வேதனையாகவும் ஒரு தவமாகவும் புரிந்துவைத்திருந்தேன்.
மனிதர்களிடம் வழக்கமாகக் காணப்படும் குறைபாடுகள் எதுவும் எனக்குக் கிடையாது எனக் கருதி வாழும் ஒருவன் கடவுளை ஏமாற்றவே முயற்சிக்கிறான்.
பெண்மையுடன் தொடர்புகொண்ட எல்லாக் குணக்கேடுகளும் என்னிடம் தாராளமாக இருந்தன. பாதுகாப்பைக் குறித்து அபரிமிதமான ஏக்கம், அழகுப்பொருட்கள்மீதும் நறுமணப்பொருட்கள்மீதும் உள்ள மோகம், குதூகலிப்பதற்கும் அகந்தை கொள்வதற்குமான ஈடுபாடு, வீரபுருஷர்களுடனான வழிப்பாட்டு மனோபாவம்
பரிபூரண காதலாலும் காதலுக்கான தியாகத்தாலும் ஒருபோதும் பத்தினித்தனத்திற்கு ஊறு ஏற்படாது. காதல் என்பது தவம். அதுதான் தவத்தின் இறுதி மோட்சம்.
நான் பிறக்கும்வேளையில் ஏதோ சபிக்கப்பட்ட தெய்வம் அறைக்குள் நுழைந்து என்னைத் தொட்டது. ஆகவே நான் இன்றைய நானானேன்.
இறந்தகாலத்தின் மீது நமது காலடிகள் உறுதியாக இருப்பதில்லை. நாம் நிகழ்காலத்தின் செல்லப்பிள்ளைகள். முன்னோக்கி மட்டுமே சுவடுகளை வைக்கும் நடனமாக நமது வாழ்க்கை இருக்க வேண்டும். ஆகவே
ஒருவனின் எதார்த்த உலகம் வெளியில் தென்படும் உலகம் அல்ல. அவனுக்குள் இருப்பதும் முடிவற்றதுமான உலகம் அது. தன்னிடமிருந்து பயணிக்க ஆயத்தமாகும் ஒருவனுக்குத்தான் தெரியும், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைக்கு முடிவில்லையென்று.
சமுதாயம் ஏற்றுக்கொண்ட ஒழுக்கவிதிகளை நான் பொருட்படுத்தாமைக்குப் பல காரணங்கள் உள்ளன. அழியக்கூடிய மனித உடலே இந்த ஒழுக்கத்தின் அடிக்கல். அழிவற்ற மனித ஆத்மாவில் அல்லது அதைக் கண்டறியக்கூடிய திறன் இல்லையென்றால், மனித மனத்திலாவது உருவாக்கப்பட வேண்டியதுதான்
எனது ஆத்மா உங்களிடம் கேட்கிறது: என்னை நேசிக்க உங்களால் இயலுமா, என்றேனும் உடல் என்கிற ஆடையைக் களைந்து முழு நிர்வாணமாக நிற்கும் என்னை நேசிப்பீர்களா . . . நீங்கள் தலையாட்டுகிறீர்கள் . . ? அதற்குச் சாத்தியமில்லை. அதனுடைய மதிப்பு அதனுடைய ஆடையலங்காரங்களின் மதிப்பு மட்டுமே. எங்கள் பார்வையில் பருத்த முலைகள், அடர்த்தியான கூந்தல், நறுமணம் மிக்க மர்ம ரோமம் . . . இவற்றையெல்லாம் நீக்கிவிட்டால் எஞ்சுவது எங்களுக்குத் தேவைப்படாத பொருள். அது துயரமானது, அந்த ஆத்மா . . .