More on this book
Kindle Notes & Highlights
Read between
April 1 - April 7, 2024
"விதி! பின்னே எதுக்காக சாமி படத்துக்கு முன்னாடி கண்ணை மூடிக்கிட்டு நிக்கிறியாம்?"
சுந்தரத்தின் மூத்த குழந்தை, கடைசிக் குழந்தையை இடுப்பில் தாங்கிக்கொண்டு தெரு வழியே அலைவதை இப்போது பார்க்கலாம். மற்ற மூன்று குழந்தைகளும் பின் தொடர்கின்றன. சில தினங்களில் அந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. இன்னும் சில தினங்கள் ஓடி மறைந்தன. இப்போது மூத்த குழந்தையின் இடுப்புச் சுமை ஒழிந்துவிட்டது.
தோட்டியின் மகனுக்குத் தோட்டியென்றால் யாரென்று தெரியாது. ஆனால் அவன் வயதையொத்த மற்ற குழந்தைகளுக்குத் தெரியும். ஏனெனில் அவர்கள் தோட்டியை வெறுப்பவர்கள்.
"நமக்கு வேண்டியவங்களா ஆருமே இல்லெ. நாம தன்னந்தனியா ஆயுட்டோம். நம்மட்டெ அன்புள்ளவங்க ஆரு இருக்குறா? எனக்கு நீ, ஒனக்கு நான். நம்ம கொளந்தைக்கு நாமதான்." வள்ளியின் கண்கள் நிறைந்தன. இந்தப் பரந்து கிடக்கும் உலகில் அவர்கள் தன்னந்தனியாக - ஆமாம் தன்னந்தனியாகத்தான்!
வாழ்க்கை என்றாலே மனம் சோர்ந்துபோகும் துன்பங்களில் உழலுவது என்றாகிவிட்டதல்லவா?
"நாம் தனிநபரை மறந்துவிட்டு, அந்தத் தனிநபர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமுதாய நிலைமையை எதிர்ப்போம். அந்த எதிர்ப்பில் நீ வஞ்சம் தீர்த்துக்கொள்ள எண்ணும் தனிநபரும் அழிந்து போவான்."