இச்சை! எந்தவொரு மனிதனும் எந்தவொரு கணத்திலும் தடுமாறி விழுந்துவிடக்கூடிய ஓர் ஆழமான, நயவஞ்சகமான படுகுழி அது! ஒருவனை எந்தவொரு கணத்திலும் தாக்கி அவனுடைய உயிரைப் பறிக்கக்கூடிய மின்னல் அது! தன்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் எரித்துச் சாம்பலாக்குகின்ற நெருப்பு அது!