மனித வாழ்வில் மறதி என்பது எப்பேற்பட்ட சக்தி வாய்ந்த ஆற்றலாக இருக்கிறது! அன்றாட வாழ்வில் பல சம்பவங்கள் நிகழுகின்றன. அவை எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தால், அது ஒருவருக்குப் பைத்தியம் பிடிக்கும்படி செய்துவிடும். அதனால்தான், மறப்பதற்கான திறனை இயற்கை நமக்குக் கொடுத்துள்ளது.