காலதேவனைவிட அதிகமாகக் கணிக்கப்பட முடியாத ஓர் ஆளுமை இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை. அவன் தன் விருப்பம்போல இந்த பூமியின் நிறத்தை மாற்றுகிறான். அவன் ஒரு நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகிறான். இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நகரங்களை ஒரு மலைப்பாம்பைப்போல ஒட்டுமொத்தமாக அவன் விழுங்கிவிடுகிறான்.