கர்ணன்: காலத்தை வென்றவன்
Rate it:
Read between October 10, 2020 - September 26, 2022
0%
Flag icon
இறந்தவர்கள்கூடப் பேச வேண்டிய ஒரு காலம் வரத்தான் செய்கிறது. சதையுடனும் எலும்புகளுடனும்கூடியவர்கள்
0%
Flag icon
தன்னுடைய ஒட்டுமொத்தக் கதையையும் உலகிற்கு எடுத்துரைக்கும்வரை எந்தவொரு மனிதனும் தன்னுடைய மனச்சுமை நீங்கப் பெறுவதில்லை, அவனுடைய மனம் லேசாவதில்லை.
Premanand Velu liked this
0%
Flag icon
நினைவுகள் ஒரு யானையின் பாதச் சுவடுகளைப் போன்றவை என்று நான் கருதுகிறேன். நம்முடைய ஈரமான மனத்தில் அவை ஓர் ஆழமான, அழிக்கப்பட முடியாத தடத்தை விட்டுச் செல்லுகின்றன.
Premanand Velu liked this
1%
Flag icon
கண்ணீர் ஒருவருடைய பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பதை நான் அறிவேன். துயரம் எனும் நெருப்பை அணைப்பதில் கண்ணீர்த்துளிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
2%
Flag icon
ஆவல் என்பது இருப்புக் கொள்ள முடியாமல் தவிக்கின்ற ஒரு குதிரையைப் போன்றது. உங்கள் எண்ணங்களின் கடிவாளங்களை நீங்கள் எவ்வளவுதான் இழுத்துப் பிடித்தாலும், அந்த எண்ணங்கள் தொடர்ந்து முன்னோக்கி ஓடிச் சென்று கொண்டே இருக்கும்.
2%
Flag icon
ஒரு காக்கையின் கூட்டில் வளருவதால் ஒரு குயில் ஒரு காக்கையாக மாறுவதில்லை, இல்லையா?
5%
Flag icon
ஓர் அற்பப் பாம்பைக் கொல்லுவதற்கு முன்பாக, உனக்குள் இருக்கும் பாம்பைக் கொல். கோபம் ஒரு பயங்கரமான பாம்பு. பலவீனமான ஓர் உயிரினத்திற்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்காதே.”
Premanand Velu liked this
5%
Flag icon
இவ்வுலகில் எத்தனை வகையான மனிதர்கள், எத்தனை வகையான இயல்புகளுடன் இருக்கிறார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.
7%
Flag icon
கற்றல் என்பது ஒரு செடியைப் போன்றது. அர்ப்பணிப்பு எனும் உரம் அதற்குப் போடப்பட வேண்டும், ஒருமித்த கவனத்துடன்கூடிய முயற்சி என்ற நீர் அதற்கு ஊற்றப்பட வேண்டும். அப்போதுதான் அது தழைத்து வளரும்.
10%
Flag icon
குதிரை ஒருபோதும் உட்காருவதில்லை. அது தன்னுடைய குளம்பை வளைத்துக் கொண்டு, நின்றபடியே தூங்கும்.
10%
Flag icon
பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகளிலிருந்து பேரழிவைத் தவிர வேறு என்ன விளைவு ஏற்பட முடியும்?
10%
Flag icon
நதிகள் நதிகள்தாம், மனிதர்கள் மனிதர்கள்தாம். இவ்வுலகில், தன்னுடைய தவறுகளால் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்ளுகின்ற ஒரே விலங்கு மனிதன் மட்டும்தான்.
11%
Flag icon
யதார்த்தம் வேறு விதமாக இருந்தது. சில சமயங்களில், மனிதன் ஒரு பறவையை அல்லது ஒரு விலங்கைவிடவும் அதிக ஆதரவற்ற நிலையில் இருக்கிறான்.
13%
Flag icon
உண்மை கொடூரமானது. பல சமயங்களில், ஒரு மனிதன் சுலபமாக இறப்பதற்கு அது அவனை அனுமதிப்பதில்லை.
15%
Flag icon
ஒரு மனிதன் தன் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே அந்தத் தற்செயலான நிகழ்வுகள்தாம். ஆனால், எல்லாம் தன்னால்தான் நிகழுகிறது, எல்லாவற்றையும் தான்தான் சாதிக்கிறோம் என்று அவன் நினைத்துக் கொள்ளுகிறான்.
15%
Flag icon
குழந்தைப்பருவம் என்றால் நறுமணம் மிக்க ஒரு மகிழ்ச்சி வட்டம் என்று பொருள். குழந்தைப்பருவம் என்றால் உயர்ந்த எதிர்பார்ப்புகள் என்று பொருள். குழந்தைப்பருவம் என்றால் படிகம் போன்ற தூய வெள்ளை நிறம் என்று பொருள். அங்கு முகமூடிகள் எதுவும் அணியப்படுவதில்லை. அங்கு பொறாமைக்கு இடமில்லை. குழந்தைப்பருவம் என்பது வாழ்க்கை எனும் பாலைவனத்தின் வழியாகத் தன் பயணத்தைத் துவக்கவிருக்கின்ற ஒருவருக்கு, இயற்கை முன்கூட்டியே வழங்குகின்ற, குளிர்ந்த நீர் அடங்கிய ஒரு குவளையாகும்.
Premanand Velu liked this
16%
Flag icon
வானவில்லின் நிறங்களைக் கண்டு பிரமித்து அவற்றைப் போற்றுவதற்கு ஒருவர் ஒரு வானமாக இருக்க வேண்டிய அவசியமில்லை,”
16%
Flag icon
சில சமயங்களில், சில நிகழ்வுகள் ஒரு மனிதனை முற்றிலும் மாற்றிவிடக்கூடிய அசாதாரணமான சக்தி படைத்தவையாக இருக்கின்றன.
17%
Flag icon
‘வாழ்க்கைகூட இவ்வுலகமெனும் சுரங்கப்பாதையிலிருந்து தப்பிச் செல்லப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு பறவையைப் போன்றதுதான்.’
17%
Flag icon
“வீரம் மிக்க ஆண்கள், வெற்றியால் வருகின்ற மகிழ்ச்சிக்காக வாழ வேண்டும்; வீரம் மிக்கப் பெண்கள் தங்களுடைய மானத்தைக் காக்க உயிர் துறக்கத் தயாராக இருக்க வேண்டும்,”
17%
Flag icon
மிதமிஞ்சிய ஆடம்பரம் ஆன்மாவின் அழிவுக்கு வழி வகுக்கும்.
18%
Flag icon
வசந்தகாலம் என்பது பருவமழையின் விரல்கள் பூமியெனும் குழந்தையின் கன்னங்களில் ஏற்படுத்துகின்ற கன்னக்குழிகள்!
20%
Flag icon
பெண்ணின் வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பம். பெண் எனும் நீரோடை ஒன்று, ஆண் எனும் சக்திவாய்ந்த ஒரு பெருங்கடலுடன் கலக்கின்ற ஒரு நிகழ்வு அது. ஒரு பெண்ணினுடைய வாழ்வின் உண்மையான முதல் சடங்கு அது.
20%
Flag icon
மனித வாழ்வில் மறதி என்பது எப்பேற்பட்ட சக்தி வாய்ந்த ஆற்றலாக இருக்கிறது! அன்றாட வாழ்வில் பல சம்பவங்கள் நிகழுகின்றன. அவை எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தால், அது ஒருவருக்குப் பைத்தியம் பிடிக்கும்படி செய்துவிடும். அதனால்தான், மறப்பதற்கான திறனை இயற்கை நமக்குக் கொடுத்துள்ளது.
21%
Flag icon
விட்டுக்கொடுப்பதை உள்ளடக்கியதுதானே வாழ்க்கை?
21%
Flag icon
பொறாமை என்பது இரண்டு கூரிய முனைகளைக் கொண்ட ஒரு வாளைப் போன்றது. பொறாமை கொள்ளுகின்றவருக்கும் அது ஆபத்தானது, யார்மீது பொறாமை கொள்ளப்படுகிறதோ அவருக்கும் அது ஆபத்தானது.
21%
Flag icon
செல்வம் ஒரு மனிதனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறது. செல்வம், புகழ், மரியாதை ஆகியவற்றோடு மனிதனால் விளையாட முடியும், ஆனால் வாழ்க்கையோடு அவனால் ஒருபோதும் விளையாட முடியாது.
22%
Flag icon
காலதேவனைவிட அதிகமாகக் கணிக்கப்பட முடியாத ஓர் ஆளுமை இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை. அவன் தன் விருப்பம்போல இந்த பூமியின் நிறத்தை மாற்றுகிறான். அவன் ஒரு நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுகிறான். இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நகரங்களை ஒரு மலைப்பாம்பைப்போல ஒட்டுமொத்தமாக அவன் விழுங்கிவிடுகிறான்.
23%
Flag icon
இச்சை! எந்தவொரு மனிதனும் எந்தவொரு கணத்திலும் தடுமாறி விழுந்துவிடக்கூடிய ஓர் ஆழமான, நயவஞ்சகமான படுகுழி அது! ஒருவனை எந்தவொரு கணத்திலும் தாக்கி அவனுடைய உயிரைப் பறிக்கக்கூடிய மின்னல் அது! தன்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் எரித்துச் சாம்பலாக்குகின்ற நெருப்பு அது!
23%
Flag icon
இவ்வுலகில் அர்த்தமில்லாமல் எதுவுமே நிகழுவதில்லை.
25%
Flag icon
சுதந்திரம் இல்லாத வாழ்க்கை ஒரு விக்கிரகம் இல்லாத ஒரு கோவிலைப் போன்றது. என் பதவிதான் என்னுடைய சுதந்திரமாக இருந்தது. சுதந்திரம் எந்த வடிவத்தில் வந்தாலும் அது சுதந்திரம்தான்.
27%
Flag icon
படைப்பின் துவக்கத்திலிருந்து எத்தனைக் காதல் இரவுகளை அந்த நிலவு பார்த்திருக்குமோ, யாரறிவார்?
Premanand Velu liked this
28%
Flag icon
நேர்மையான, உணர்ச்சிவசப்படுகின்ற மனங்களைக் கொண்டவர்களுக்கு அரசியல் ஒருபோதும் சரிப்பட்டு வராது.
29%
Flag icon
நாம் உருவாக்கியிராத ஓர் உயிரை அழிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. தற்கொலை என்பது உணர்ச்சிவசப்பட்டுள்ள ஒரு மனம் ஆன்மாவை வன்புணர்வு செய்வதாகும்.”
29%
Flag icon
வாழ்க்கை. அது ஒரு துவக்கமற்றத் துவக்கத்திலிருந்து புறப்பட்டு, முடிவற்ற ஒரு முடிவைச் சென்றடைகின்ற ஒரு முடிவற்றப் பயணமே.”
31%
Flag icon
கோவில்களின் வழுவழுப்பான தரைகளில் ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டு நறுமணக் குச்சிகளிலிருந்து வரும் நறுமணத்தை முகர்ந்து கொண்டிருக்கின்ற வீணர்கள் பேசுகின்ற வெற்று வார்த்தைகளே.
35%
Flag icon
வாழ்க்கை என்பது தவிர்க்கப்பட முடியாத, மீறப்படக் கூடாத ஒரு சமரசம்.
35%
Flag icon
“சரியான நேரம், அகால நேரம் என்பதெல்லாம் நாமாக நினைத்துக் கொள்ளுவதுதான். நேரம் எல்லோருக்குமே சௌகரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஓர் அசௌகரியமான நேரத்தையும் ஒரு சௌகரியமான நேரமாக ஆக்கிக் கொள்ளுகின்றவன்தான் ஓர் உண்மையான வீரன்,”
38%
Flag icon
“வாழ்க்கை என்பது சூரியனிடமிருந்து வெளிவருகின்ற ஒரு தெய்விக ஒளியாகும். எவன் இதை உணர்ந்து கொள்ளுகிறானோ, அவன் தன் வாழ்க்கையைப் பிரகாசமானதாக ஆக்கிக் கொள்ளுகிறான்.
42%
Flag icon
செல்வமும் அதிகாரமும் மனிதர்களை விலங்குகளைவிட மோசமானவர்களாக மாற்றிவிடுகின்றன.
48%
Flag icon
“ஒரு குழப்பமான மனம் எல்லா இடங்களிலும் குழப்பத்தையே காணும்.
49%
Flag icon
அரசியல் என்பது நேர்ப்பாதையில் சென்று தன் இலக்கைத் தாக்குகின்ற ஓர் அம்பு அல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து நெளிந்து செல்லுகின்ற ஒரு நாகாஸ்திரம்
49%
Flag icon
“பழியுணர்வு ஒருபோதும் ஒரு மனிதனின் அடிப்படை உணர்வாக இருப்பதில்லை. அவமானப்பட்ட ஒரு மனம் ஆற்றுகின்ற எதிர்வினைதான் அது.
50%
Flag icon
மனம் எதை உணருகிறதோ, கண்கள் அதையே பார்க்கின்றன.
55%
Flag icon
உறக்கம்தான் மிகவும் அன்பான தாய். அவள் எல்லோருடைய துன்பங்களுக்கும் சிறிது நேரம் ஆறுதல் வழங்குகிறாள். சிறிது நேரம் மட்டுமானாலும், அவள் கச்சிதமாகவும் நிச்சயமாகவும் ஆறுதல் வழங்குகிறாள்.
55%
Flag icon
இயல்பு என்பது ஒரு தேர்க் குதிரையைப் போன்றது அல்ல. நீங்கள் விரும்பும்படி அதை மாற்ற முடியாது.
61%
Flag icon
மனிதர்களைவிட விலங்குகள் அதிக நம்பகமானவை, அதிக விசுவாசமானவை
65%
Flag icon
இவ்வுலகில் யாரும் வெல்லுவதுமில்லை, யாரும் தோற்பதுமில்லை.
66%
Flag icon
மனிதன் எவ்வளவு சாதனைகளை நிகழ்த்தினாலும் சரி, இயற்கையின் முன்னால் அவன் அற்பமானவனாகவே இருக்கிறான்.
68%
Flag icon
“தன் சொந்தக் கலாச்சாரத்தை ஒவ்வொருவரும் தன் உயிரினும் மேலாக மதிக்கின்றனர். அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். ஏனெனில், வாழ்க்கைக்கான அறிகுறி அது!
« Prev 1