More on this book
Community
Kindle Notes & Highlights
என்னைக் குறை கூறுவதன் மூலமே நான் மதிக்கும் 'இவன்' ஆகிவிட முடியும் என்ற நினைப்பில், எனது நிறைவைக் குறை என்று கூற வந்த போது மனத்துள் சிரித்தவாறு விலகி நடந்திருக்கிறேன்;
என்னா ஆண்டவனே அழகு? பொம்பளை மேலே ஆசை இருக்கிற வரைக்கும் நம்ம கண்ணுக்கு அவ அழகாத்தான் இருப்பா. ஆசை பூடுச்சின்னா அழகும் பூடும்...”
உலகத்திலே நாம்ப அசடுன்னு நெனக்கிறவங்க எல்லாம் அசடு இல்லே; பெரிய மேதைன்னு நெனைக்கிறவங்க எல்லாம் மேதையுமில்லே. அசடுகளும் கடவுளின் பக்கத்திலே நிக்கிற அளவுக்கு மகானைப்போல் உயர்ந்த மனுசனாகவும் இருக்கமுடியும், மேதைங்களும் கடை கெட்ட அயோக்கியவனா மிருகத்துக்கும் கீழானவனா இருக்க முடியும்.
அறிவுங்கறது வேற, மனசுங்கறது வேறே.
நாம் எவன் ஒருத்தனை ரொம்ப புத்திசாலித்தனமா, ரொம்ப சீக்கிரமா முட்டாள்னு நெனைக்கிறோமோ, அசடுன்னும் கிறுக்குன்னும் நெனைக்கிறோமோ அவனோட எல்லாம் நெருங்கிப் பாத்தா, ஒரு வேளை இந்த மாதிரித் தன்மையைக் காண முடியுமோ, என்னவோ?
'ஏ' கொரங்கு மனம் படைச்ச மனுசப் பிறவியே? நீ கெட்டதைக் காதால் கேக்காதே, கெட்டதைக் கண்ணால் பார்க்காதே. கெட்டதை வாயினால் பேசாதே! நீ எதைக் கேட்கிறாயோ, எதைப் பார்க்கிறாயோ, எதைப் பேசுகிறாயோ அதையே செய்வே. அது உன்னோடு போறதில்லே. உலகத்தையே கெடுக்கும்'னு
“தீயாரைக் காண்பதுவும் தீது: திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீது; தீயார் குணங்கள் உரைப்பது தீது! அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது”

