அவனிடம் பேசுவதற்கு முன் சற்றே நிதானித்துத்தான் பேசுவார். அவனும் அவரிடமிருந்து வரும் வார்த்தையில் சத்தியத்தைத் தேடுவது போல் கவனமாய் உற்றுக் கேட்பான். பேசுகின்ற விஷயம் எவ்வளவு அற்பமாய் இருந்தபோதிலும் இருவரும் அதில் ஏதோ அற்புதத்தைக் காண்பார்கள். “ஆண்டவனே, நான் காசைக் கரியாக்கறேனாம், நம்ம எஜமான் சொல்றார்!”

