More on this book
Community
Kindle Notes & Highlights
அவனிடம் பேசுவதற்கு முன் சற்றே நிதானித்துத்தான் பேசுவார். அவனும் அவரிடமிருந்து வரும் வார்த்தையில் சத்தியத்தைத் தேடுவது போல் கவனமாய் உற்றுக் கேட்பான். பேசுகின்ற விஷயம் எவ்வளவு அற்பமாய் இருந்தபோதிலும் இருவரும் அதில் ஏதோ அற்புதத்தைக் காண்பார்கள். “ஆண்டவனே, நான் காசைக் கரியாக்கறேனாம், நம்ம எஜமான் சொல்றார்!”
“யாருதான் காசை வீணாக்காமயிருக்காங்க. நீ படமும் பொம்மையும் வாங்கறே; நான் புஸ்தகமா வாங்கறேன். பீடியாக் குடிக்குறேன். மத்தவன் எல்லாம் சினிமாவுக்குப் போறான், இல்லாட்டிப் பொம்பளைக்குக் குடுக்கறான். எனக்கு நீ பண்ற செலவு வீண் செலவாத் தோணுது! ஒனக்கு நான் பண்றது வீணாத் தோணுது.
அப்புறம் காசை என்னதான் பண்றது? யாரும் ஒண்ணும் பண்ணாம நம்ம மொதலாளி கிட்டேயே குடுத்துட்டா, அவரு சேத்துச் சேத்து வெச்சி இன்னம் பணக்காரனா ஆவாரு, நமக்கு என்னா லாபம்? பணத்துக்குத்தான் அதனாலே என்னா லாபம்...?

