More on this book
Community
Kindle Notes & Highlights
“யாருதான் காசை வீணாக்காமயிருக்காங்க. நீ படமும் பொம்மையும் வாங்கறே; நான் புஸ்தகமா வாங்கறேன். பீடியாக் குடிக்குறேன். மத்தவன் எல்லாம் சினிமாவுக்குப் போறான், இல்லாட்டிப் பொம்பளைக்குக் குடுக்கறான். எனக்கு நீ பண்ற செலவு வீண் செலவாத் தோணுது! ஒனக்கு நான் பண்றது வீணாத் தோணுது. அப்புறம் காசை என்னதான் பண்றது? யாரும் ஒண்ணும் பண்ணாம நம்ம மொதலாளி கிட்டேயே குடுத்துட்டா, அவரு சேத்துச் சேத்து வெச்சி இன்னம் பணக்காரனா ஆவாரு, நமக்கு என்னா லாபம்? பணத்துக்குத்தான் அதனாலே என்னா லாபம்...?
அழகு என்னா ஆண்டவனே அழகு? பொம்பளை மேலே ஆசை இருக்கிற வரைக்கும் நம்ம கண்ணுக்கு அவ அழகாத்தான் இருப்பா. ஆசை பூடுச்சின்னா அழகும் பூடும்...”
பைத்தியத்துக்கு உலகம் பைத்தியம், உலகத்துக்கு பைத்தியம் பைத்தியம்'ங்கிற
“தீயாரைக் காண்பதுவும் தீது: திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீது; தீயார் குணங்கள் உரைப்பது தீது! அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது”
சில சந்தர்ப்பம் வரும் - எவ்வளவு நல்லவனையும் கெடுக்கறத்துக்குன்னு, அதிலே தப்பிக்கணும்...”

