More on this book
Community
Kindle Notes & Highlights
'மனிதர்கள் அவ்வளவு நல்லவர்கள் அல்ல என்பதுதான் இத்தனை கால வாழ்க்கை அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட துரதிர்ஷ்டமான செய்தி'
சாதாரண ஜீவனின் பிறப்புக்கு அடையாளம் ஏது?
செல்வத்தைக் கொண்டுவரும் மழையைத் திட்டி அடித்து விரட்டினால் அது இன்னொரு முறை வருமா?
அது தேய்பிறை இரவு. நிலா உதிக்காத முன்னிரவு. கருமிரவு. அவர்கள்
கள்ளுப் போத சாராயப் போதைன்னு சொல்றாங்களே, அதெல்லாம் போத கெடையாது. இந்தப் பேச்சுத்தான் போத. பேச்சுப்போத மீறுச்சுன்னா எல்லாத்தயும் மறந்திருவம்'
கறுப்பைக் கண்டாலே வெறுப்புத்தான்.
வாயிருப்பது மூடிக்கொள்ளத்தான். கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டியிடத்தான். முதுகிருப்பது குனியத்தான். உடலிருப்பது ஒடுங்கத்தான்.
'நம்மாளுகளுக்கு வரிசைல நிக்கற பழக்கமே கெடையாது. அதான் நிக்க வெச்சுப் பழக்கறாங்க.'
'நம்மளப் பத்திப் பேசுனா செவுடு. அதப் பத்திப் பேசுனா கூரு.'
'நாமெல்லாம் வாயக் கட்டுனாத்தான் வாழ முடியும். முதுவுல அடி உழுந்தாக்கூட வாய்க்குள்ள மொனகிக்கோணும். பக்கத்துல இருக்கறவங்களுக்குக் கேக்கறாப்பல மூச்சுக்கூட உடக்கூடாது. இத்தன வெருசம் பொழச்சுமா உனக்கு இது தெரீல.'
தரையைத் தவிர எதையுமே கண் பார்க்காமல் வாழ்வதும் ஒரு வாழ்வா? மரம், நிலா, நட்சத்திரம், பொழுது என்னும் அற்புதங்களில் ஒன்றையாவது பார்த்திருக்கக் கூடுமா?
குனிவைத் தளை என்று உணராமல் வாழும் பாக்கியம் பெற்றவை செம்மறிகள்.
இந்த வனத்தில் எல்லாம் கிடைக்கும். தன் கூட்டம் கிடைக்குமா?
'சனம் எல்லாத்தயும் அழிச்சு அழிச்சுக் கையில வழிச்சு வழிச்சு வாயில போட்டுக்குது. அப்பறம் சனத்தத் தவிர வேறெது இங்க வாழ முடியும்?
கடசியாச் சனமுந்தான் வாழ முடியுமா?' என்று அக்கிழவி பெருமூச்சு விட்டாள்.
தப்பென்று சொன்னால் எல்லாமே தப்புத்தான். எதை யார் தடுத்திருக்க முடியும்?
போனவங்களோட கஷ்டமும் போயிருது. இருக்கறவங்களோட கஷ்டமும் இருக்குது'
'மனநிலைன்னா?'
அவள் எதை எதையெல்லாம் பராமரிப்பாள்?
குட்டி விற்ற காசு வந்ததும் அப்படியே மாறிப் போனாள்.
'இந்த மனசு இருக்குதே அதுக்கு எத்தன குடுத்தாலும் போதாது.'
'நான் இருப்பன்னு நானே நெனைக்கல. வெள்ளாட்டுக் கெடாய்க்கு எப்ப வேண்ணாலும் சாவு வரலாம். கறிக்குச் சாவுவோம். பலிக்குச் சாவுவோம். அதனால உன்னோட இருக்கறனே, இது மாதிரி கெடைக்கற கணத்துல வாழ்ற நிமிச வாழ்க்கைதான் எனக்கு' என்று பூவன் சொன்னான்.
யார் யாரோடு பழக வேண்டும், யார் யாருடன் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் சம்பந்தம் இல்லாதவர்கள் தீர்மானிக்கிறார்களே, எப்படி?
அது வாசல் வேம்பில் பட்டு எதிரொலித்து அவளிடமே வந்தது.
என்னதான் இருந்தாலும் ஒருசத்தம் கொடுக்காமல் வெள்ளாடு எப்படிச் சினையாகும்?
அதிசயம் எப்போதாவது நடப்பது. அடிக்கடி நடந்தால் சாதாரணம்.
பஞ்ச காலத்தில் அதிசயத்திற்கு என்ன வேலை? வயிறு நிறைந்து ஆசுவாசமாக இருக்கும் போதில்தான் அதிசயமும் கண்காட்சியும் எல்லாம்.