More on this book
Kindle Notes & Highlights
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1947ல் முப்பத்து ஒன்று வயதாக இருந்தது. அது 2015ல் அறுபத்து எட்டு வயதாக உயர்ந்துள்ளது.
Sugan and 1 other person liked this
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேறு மாதிரி பிரச்சனை ஏற்பட்டது. இங்கே பசுமைப் புரட்சியின் விளைவாகப் பசி ஒழிந்தது. அனைவருக்கும் உணவு கிடைத்தது. ஆனால் இந்தியாவின் பிராந்திய தானியமான அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரண்டும் அதிக அளவு கார்போஹைட்ரேட் கொண்டவை ஆகும். இவ்வாறு மிகை கார்போஹைட்ரேட் உணவுகள் மக்களுக்கு உடல் பருமனையும், சர்க்கரை நோயையும் கொண்டு வந்துள்ளது. அதே போல இந்திய உணவுகள் 'குறை புரத' உணவுகள் ஆகும். கூடுதலாக இங்குப் பரவியுள்ள 'சைவ உணவுப் பழக்கம்' புரதச் சத்துக்குறைவு மற்றும் அதனை ஒட்டிய பல்வேறு பிரச்சனைகளையும் தற்போது கொண்டு வந்துள்ளது.
மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பு வேட்டையாடுதலில் கிடைத்த இறைச்சி மூலம் மிக அதிக புரதம், கொழுப்பு, விட்டமின் B3 மற்றும் B12 ஆகியவை மனித மூளை செழிப்புற வளர உதவியது10.
"கிருமிகள் தாங்கள் வாழ்வதற்காக தான் மனிதர்களையே விட்டு வைத்துள்ளன" என்பதாகும்.
மனித இனம் இருக்கிறதா இல்லையா என்று இயற்கைக்கு எந்த கவலையும் இல்லை.
அறிவியல் மருத்துவம் இந்த மருந்து இங்கிருந்து வந்தது, அங்கிருந்து வந்தது என்று பாகுபாடு பார்ப்பதில்லை. அறிவியல் பகுத்தறிவின் உச்சம் ஆகும். விஞ்ஞான மருத்துவத்தின் ஒரே முன்முடிவு அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக (Proven) இருக்க வேண்டும் என்பது ஒன்றே ஆகும். எடுத்துக்காட்டாக ஏதேனும் ஒரு பாரம்பரிய மருந்து வேலை செய்வதாக நிரூபிக்கப்படுமாயின் நிரூபிக்கப்பட்ட அடுத்த நாள் முதல் அது அறிவியல் உலகின் மருந்தாகி விடும். நிரூபிக்கப்படாதவை மாற்று மருத்துவமாகத் தொடரும்.
உண்மையில் இயற்கை படைத்ததை இயற்கை அழிக்கும். டார்வினின் மொழியில் கூறினால் “தகுதி உள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கும்” மற்றவை இயற்கையால் அழிக்கப்படும்.
மஞ்சள்காமாலைக்கு இப்போதும் பச்சிலை வைத்தியம் பிரபலமாக இருக்கக் காரணம் பொதுவாக வரக்கூடிய தானாகச் சரியாகக் கூடிய ‘ஹெபடைடிஸ் ஏ’ எனும் நோய், அதிக அளவில் சமூகத்தில் உள்ளது தான்.
ஆர்கானிக் உணவுகள், பூச்சிகொல்லிகள் மற்றும் உரங்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் உணவுகள் என்று சொல்லப்படுகின்றது. இது உண்மையா என்று தெரியவில்லை. உலகின் பல பகுதிகளில் ஆர்கானிக் என்று விற்பனையாகும் பொருட்கள் சாதாரண முறையில் உற்பத்தி ஆகும் பொருட்கள் தான் என்று பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மரபியல் விஞ்ஞானத்தின் படி எந்த இனம் அதிகக் கலப்புக்கு உட்படுகிறதோ அதுவே சிறப்பான உயிரினமாக இருக்க முடியும்.