More on this book
Community
Kindle Notes & Highlights
"டுர்ரீன்னு அதன் முகத்துக்கு முன்னாடியோ வால் பக்கமோ கத்திட்டா போதும்; பொறவு மீதியைப் பார்த்துக் கிட வேண்டியதுதான். வாடிவாசல்லே அதை அவுத்து விடறதுக்கே நடுக்கமாப் போச்சுங்க. அந்தப் பேரு நிக்கவும் தானே, அதே ஜோர்லே சமீன்தாரு வந்து கேக்கறப்போ இரண்டு முளு நோட்டுக்கு தள்ளிட்டாரு தேவரு. பேரு போதும், ரூபாயைக் கண்ணாலே பார்ப்போம்னு."
பட்டத்து யானைக்குப் படாம் போர்த்தின மாதிரி பல வர்ண பட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணி வரைக்கும் முதுகோடு படிந்து இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல் ஜல் என்று சலங்கை மாலையும், கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணித்துக் கண்கள் கீழ் நோக்கி இரு பக்கமும் பார்க்க, கம்பீர நடை போட்டு அமரிக்கையாக வந்தது காரி.
அந்தக் கொம்பிலிருந்து ஒரு வீச்சம் அவன் மூக்கில் அடித்த மாதிரி, மூக்கை ஒரு தடவை சிணுங்கி மூச்சை வெளியே தள்ளினான்.
"பார்த்துடலாம்," என்று பிச்சி ஒரே வார்த்தைதான் சொன்னான், அதுவும் மெதுவாக.
இந்த வார்த்தைகளுக்குப் பின் இருந்த அந்தப் பையனுடைய துணிச்சலையும் ஊக்கத்தையும் கிழவனால் பாராட்ட முடிந்த போதிலும், வயது, வாழ்க்கையை ஒரு அளவு நிதானத்துடன் பார்க்கும் சுபாவத்தை, மனப்பக்குவத்தை அவனுக்குத் தந்திருந்தது.
"வாடிவாசல்லே விவகாரம் வேண்டாம், அண்ணே. அதென்ன அப்படி கேட்டே? கிளக்குச் சீமைலேருந்து வேடிக்கை பார்க்க வரமாட்டான். வேடிக்கை காட்டத்தான் வருவான்."
நோட்டை விட அந்தப் பாராட்டுதான் அவனுக்கும் பெரிதாகப் பட்டது.
"உத்தரவுங்க எசமான்," என்று இன்னொரு கும்பிடுடன் திரும்பாமலே பின் எட்டுப்போட்டு நகர்ந்தான் பிச்சி.
ஒரு தடவை கொம்பில் ரத்தம் கண்ட காளை சாடிக்கொண்டே போகிறமாதிரி, அவன் கை இன்னும் கொம்புகளுக்காக பறந்தது.
வெள்ளை, காரி, கரம்பை, செவலை இப்படி பல நிற காளைகள்,
"ஆனா, மாடு அணைகிறவன் மாட்டுத் திமிலையும் கொம்பையும்தான் பார்ப்பான். அதைப் புடிச்சிக்கிட்டு வாரவன் கையைப் பாக்க மாட்டான்
இத்தனை வருஷமும் இல்லாமல் தன் காளைமீது ஒருவன் விழுந்தான் என்ற பேச்சு பிறக்கப் போகிறதே என்று சற்று மயங்கியவருக்கு, திடீரென அந்த நினைப்பு மாறி தன் வாழ்நாட்களில் வாடிவாசலில் கண்டிராத ஒரு போராட்டத்தை எதிர்பார்க்கும் துடிப்பு ஏற்பட்டது.
நந்திதேவனேயல்லவா அவதாரமாக வந்திருந்தது.
"அவன் ஒரு பிறவி! எந்த மாட்டுமேலே எப்படி விழணும்னு அவனுக்கு சுபாவத்திலேயே ஊறிக் கிடக்கும். பாருங்க!"
சில்வண்டு மாதிரி அட்டத்திலிருந்து பாய்ந்து அதன் திமிலில் இடது கையைப் போட்டு நெஞ்சோடு நெருக்கி அணைத்து கழுத்தோடு தன் உடலை ஒட்டிக்கொண்டு அதன் வலக்கொம்பில் கைபோட்டான் பிச்சி.
சளைக்கிறது கையோ கொம்போ, யார் சொல்ல முடியும் அந்த நிலையில்?
சதக்! சதக்! மிருகத்தின் கொம்புகளில் புதுப் புது ரத்தம் தோய்ந்துகொண்டிருந்தது.
"மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!"
"என்ன இருந்தாலும் அது மிருகம்தானே!"
'வாடிவாசல்' (குறுநாவல்), 'சரசாவின் பொம்மை' (சிறுகதைகள்), 'ஜீவனாம்சம்', 'சுதந்திர தாகம்' (நாவல்கள்)