More on this book
Community
Kindle Notes & Highlights
சங்க இலக்கியமாகிய கலித்தொகையில் ஆயர்கள் வாழும் முல்லை நிலத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ஏராளமாக வருணிக்கப்பட்டிருக்கின்றன.
புன்குருக்கன், சுரி நெற்றிக்காரி, நுண்பொறி வெள்ளை எனப் பலவகைக் காளைகளும் அவற்றைத் தழுவிச் சாய்க்கும் வீரத்தலைவர்களும் 'முல்லைக் கலி'யில் காட்சியாகின்றனர். 'எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்' என ஏறு தழுவும் களக்காட்சி அங்கே வருணிக்கப்படும்.
'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என்று கூறுகிறது கலித்தொகை.
ராஜமய்யரின் 'கமலாம்பாள் சரித்திரம்' ஜல்லிக்கட்டுச் சித்திரம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.
மிருகத்திற்கும் மனிதனுக்குமான போட்டி, மனிதனுக்கும் மனிதனுக்கு மான போட்டியாகப் பரிணாமம் பெற்றுவிடுகிறது. அதிகாரம் படைத்த இரண்டு மனிதர்கள் தங்கள் பலத்தைச் சோதித்துக்கொள்ளும் களமாக ஜல்லிக்கட்டைக் கையாள்கின்றனர். மிருகம் - காளை - இங்கே அதிகாரத்தின் அடையாளமாக மாறிப்போய் விடுகிறது.
கு.ப. ராஜகோபாலனின் 'வீரம்மாளின் காளை' என்னும் சிறுகதையில் காண்கிறோம்.
நாட்டியக் குதிரையைப் போல் ஓரிடத்தில் நின்றுகொண்டு நான்கு புறத்திலும் திரும்பித் திரும்பிப் பாயும் 'நின்னுகுத்தி' காளைகள் பற்றிய விவரணை இடம்பெற்றுள்ளது.
எந்த விளையாட்டிலுமே சம்பந்தப்பட்ட இருவருக்கும் 'இது விளையாட்டுத்தான்' என்று தெரிந்திருக்கும். ஆனால் இதில் அப்படியில்லை. மனிதனுக்கு விளையாட்டு; மிருகத்துக்கு அது தெரியாது. விளையாட்டு என்று அறியாத மிருகத்தின் பின்னணியில் இருக்கும் மனிதன், இதனை எத்தனையோ விதமாகக் கையாள வாய்ப்பிருக்கிறது. அதன் சாத்தியங்கள் சிலவற்றை 'வாடிவாச'லில் காணலாம். மனித சக்திக்கும் மிருக சக்திக்கும் இடையிலான போராட்டம் எனினும் மனிதனுக்குள் இருக்கும் சுபாவமான மிருகவெறியை வெளிப்படுத்தும் விளையாட்டாக இருக்கிறது.
Srihari Iyer liked this
ஜல்லிக்கட்டை மிருகவதை என்றும் காட்டுமிராண்டி விளையாட்டு என்றும் விமர்சிக்கும் ஜீவகாருண்ய நேசர்கள், ஜல்லிக்கட்டை வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்ட 'வாடிவாச'லை ஒரு முறையேனும் வாசித்துப் பார்க்க வேண்டும். பெருமாள்முருகன்
மிருகத்தை ரோசப்படுத்தி அதன் எல்லையைக் கண்டுவிட்டு, பிறகு அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்டத் துணிவதை ஒரு கலையாக சாதகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும். ஒன்று, காளையின் திமிலில் கைபோட்டு அணைந்து, கொம்பு இரண்டையும் கையால் பிடித்து அழுத்தி அது எகிறிவிடாமல் சில விநாடி நாலு கால்களில் அசையாமல் நிற்கச் செய்துவிட வேண்டும். ஏன், கால்கள் துவளத் தடுமாறி முட்டியிலே மடித்து அது கீழே சரியச் செய்துவிட வேண்டும். இல்லை, அவன் திறமைக் குறைவால் காளையிடம் அவன் வேலை பலிக்காமல் போய்க் கோட்டை விட்டுவிட்டு, தன் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏன், காலில்லாதவன் மாதிரி முகத்தைக்
...more
"மனுஷனும் சரி மாடும் சரி, வாடிவாசல்லே கண்ணீரு சிந்தப்படாது. மறச்சாதிக்கு அது சரியில்லே - அதுவும் அம்புலியை அப்பனா படைச்சவனுக்கு!"
"அவுங்க அப்பன் சொல்லிச் செத்தாரு : வயசுக் காலத்திலே இல்லாமே வயசான காலத்திலே இல்லெ இந்தக் காரிக்களுதை கண்ணிலே பட்டிருச்சு. இல்லாட்டி அந்த ஒரு பிடியிலே சகதியிலே அமுக்கிறாப்லே அமுக்கி இருப்பேன். இப்போ, மொக்கையத் தேவர் காரிகிட்ட அம்புலித் தேவன் உலுப்பி விளுந்தான்கிற பேச்சுல்ல சாகறப்போ நிலைச்சுப் போச்சு."
ஜல்லிக்கட்டு ஆரம்பமாகிவிட்டது.
ஆனால் அவன் கையை பின்னரித்த அதே க்ஷணம் கழுகு பாய்ந்து அடிக்கிற மாதிரி இரண்டு கைகள் விரித்துச் சீறி மாட்டின் கொம்பின்மீது விழுந்தன. சபக் என்ற சப்தம்தான் கேட்டது. வீசிப் பின்தள்ளப்பட்ட மருதன், மாட்டின் கழுத்தோடு ஒட்டி பிச்சி இரு கொம்புகளையும் சேர்த்துப் பிடித்து மாட்டின் முகத்தை கீழ்நோக்கி அமுக்குவதைப் பார்த்தான். காளை கைகளை உலுப்ப முழு வலுவுடன் அலைத்துப் பார்த்தது. ஆனால் கீழ்நோக்கி அமுக்கும் அந்தப் பிடி வலுவில் கொம்பலைப்பு வேகம் தளர்ந்தது. சில வினாடிகளுக்குத் திணறியது.
நூற்றுக்கணக்காக எங்கிருந்தெல்லாமோ வரும் மாடுகள் எல்லாவற்றின் போக்கு, சுபாவத்தை முழுக்க அறிந்து வைத்து ஒருவன் வாடிவாசலில் நிற்கமுடியாது. பாதை காட்டும்போது அது கொம்பலைத்து போகிற போக்கு, வாடிக்குள்ளே அது செய்கிற தந்திரம், அது பார்க்கிற பார்வை, கொம்பலைப்பு, திரும்புகிற விரைவு, இதுகளைக் கொண்டு மாட்டை நிதானிச்சு, அததுக்குத் தக்கபடி தன் உத்தியை அப்போதைக்கு அப்போது மாற்றி உபயோகித்துப் பார்க்க வேண்டியதுதான். அந்தக்
முழு வேகத்துடன் கொம்பை அலைத்து பிச்சியை அட்டத்தில் குத்தப் பார்த்தது. ஆனால் பிச்சியின் அமுக்கி அழுத்திய பிடி கொம்பை எதிர்திசைக்குத் தள்ளிக்கொண்டிருந்தது. அவனும் காளையின் தலை எப்படித் தாறுமாறாகத் திரும்பினாலும் கொம்புகள் முகத்திலோ கழுத்திலோ தட்டிவிடாதபடி முழங் கால்களை மடித்து தன் தலையை அதன் கழுத்தோடு சாய்த்துக் கொண்டான். காளையின் தலை கீழ்நோக்கி அழுத்தப்படவே காளை உத்தியை மாற்றி ஒரு எகிறு எகிறி நான்கு கால்களையும் உயரே தூக்கி தவ்வியது. பிச்சியும் அதோடு உயரே போனான்.
"பாட்டயா, எல்லாம் உங்க அனுக்ரகம்தான்." "அசட்டுப் பையா, அப்படி மனுசனுக்கு கிரீடம் வச்சுப் பேசிராதே," என்று அவனை அன்பாகக் கண்டித்துக் கிழவன் சொன்னான். "எல்லாம் ஆத்தா கண்ணுடா! அவ பேரைச் சொல்லிக் கும்புடு."
"மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!"