யுகோஸ்லாவியா என்றால் தெற்கு ஸ்லாவிய மொழி பேசும் மக்கள் என அர்த்தம். இவர்கள் ஒரு பெரிய இனக் குழுவாக கருதப்படுகிறவர்கள். இவர்களுக்குள் சிறு சிறு மொழி குழுக்களும் உண்டு. அதாவது தென் ஸ்லாவியர்களுக்குள் செர்பிய மொழிக் குழு, குரோஷிய மொழிக் குழு, ஸ்லாவிய மொழிக் குழு, மாண்டினீக்ரிய மொழிக் குழு, போஸ்னிய மொழிக் குழு, மாசிடோனிய மொழிக் குழு என்பது போன்ற சிறு மொழிக் குழுக்களும் உண்டு. இவர்களுக்கென தனித் தனி மொழிகளும் உண்டு, அவர்களுக்கென தனி நிலப்பரப்பும் உண்டு. இவர்கள் சரித்திரப் பூர்வமாக மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.