1912ல் நடந்த முதலாவது பால்கன் போரில் செர்பியர்கள் துருக்கிய சாம்ராஜ்யமான ஒட்டமான் சாம்ராஜியத்தினரை விரட்டி அடித்தனர். பால்கன் பகுதியிலிருந்து துருக்கியர்களை வெளியேற்றிய பின் நடந்த பேச்சுவார்த்தையில் பால்கன் நிலப்பரப்பை பல நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். பால்கன் பகுதியில் வாழும் பல்வேறு இனக்குழுக்களும் அந்த நிலப்பகுதியில் தங்களுக்கென சுய ஆட்சியோடு கூடிய நிலப்பரப்பை பிரித்துக் கொண்டனர். அல்பேனியர்கள் அவர்களுக்கென தனி நாட்டை உருவாக்கினார்கள். ஒட்டமான் சாம்ராஜ்யத்தில் இருக்கும் பொழுது அல்பேனியர்கள் பெரும்பாலானோர் இஸ்லாமியத்தை தழுவி இருந்ததால், அல்பேனியா ஐரோப்பாவின் இஸ்லாமிய நாடாகியது.