மிலோசெவிக் “இனி உங்களை யாரும் அடிக்க முடியாது” என செர்பிய மக்களிடம் பயம் கலந்த தொனியில் சொன்ன ஒற்றை வாக்கியம் பிரளயமாக வெடித்தது. செர்பிய மக்கள் ஒன்றிணைந்து போராட ஆரம்பித்தனர். ஒவ்வொன்றாக மற்ற மாகாணங்களில் பிரிந்து போக ஆரம்பித்தார்கள். யாருக்கு எவ்வளவு இடம் என்கிற போட்டியில் சண்டையிட்டார்கள். வளம் கொண்ட இடங்கள் மீது ஆதிக்கத்தை நிலை நிறுத்த போர் புரிந்தார்கள். நகரங்களை முற்றுகையிட்டு வதைத்தார்கள், நகர மக்களை நேர்த்தியாக ஒதுக்கி இன ஒழிப்பு கொலைகள் செய்தனர். ஆயிரமாயிரம் மக்களை இடம்பெயரச் செய்தார்கள். கூட்டம் கூட்டமாக கொலைகள், இன அழிப்பு, கும்பல் பாலியல் பலாத்காரங்கள் அரங்கேறின.
...more