ஒவ்வொரு காண்டோன்களுக்கும் தனியாக அரசியல் சாசனம் உண்டு. தனி போலீஸ் படை, தனிக் கொடி, தங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமை, நீதிமன்றம், கல்விக் கொள்கை, மருத்துவம், வரி, வருமானம் என பல துறைகளிலும் தங்களுக்கு ஏற்ற சட்டத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். தங்களுக்கென வெளியுறவு கொள்கையைக் கூட ஒரளவுக்கு ஏற்படுத்திக் கொள்ளலாம்