தங்களை ஒருங்கிணைக்கவும் நிர்வகிக்கவும் சண்டை சச்சரவுகளை தீர்க்கவும் பன்னெடுங்காலமாக நம்மூர் நாட்டாமை பஞ்சாயத்துகள் போன்ற ஒரு முறையை வைத்திருந்தனர் போட்ஸாவானியர்கள். நம்மூர் நாட்டாமை, கிராம பஞ்சாயத்துகளை விடவும் இன்னும் செறிவோடும் அனைவருக்கும் சம நீதியோடும் செயல்பட்டு வந்த கோத்லோ (Ghotla) எனும் அமைப்பை முற்றிலும் நீக்காமல் அதிலிருக்கும் சம நீதி, அனைவருக்கும் பொதுவான ஜனநாயக உணர்வை பயன்படுத்திக் கொண்டது போட்ஸ்வானா. இந்த கோத்லா எனும் பஞ்சாயத்து முறை போட்ஸ்வானாவின் அமைதிக்கும் ஜனநாயக உணர்வுக்கும் இனக்குழுக்களிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கைக்கும் அச்சாணியாக - அன்றும் இன்றும். கோத்லா தலைவர்
...more