மார்ஷல் ஜோசப் டிட்டோ, கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சோவியத் யூனியனை மாதிரியாகக் கொண்டு போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினா, குரோஷியா, மாசிடோனியா, மாண்டினீக்ரோ, ஸ்லோவேனியா, செர்பியா இனக் குழுக்களின் பகுதியை இணைத்து அதோடு வோஜ்வோடினா மற்றும் கொசோவா ஆகிய சுயாட்சி பகுதிகளை ஒன்று சேர்த்து ஜனவரி 31, 1946இல் "ஃபெடரல் பீப்புள்'ஸ் ரிபப்ளிக் ஆஃப் யுகோஸ்லாவியா" என்கிற தேசத்தை உருவாக்கினார். சோவியத் யூனியனும் இப்படித்தான் பல தேசிய குழுக்கள் ஒன்றிணைந்த ஒன்றியமாக உருவானது.