ராணுவத்தின் உதவியோடு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த சாத் பர்ரெ, சோமாலியா இனி சோஷியலிச நாடாக மாறும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய சோமாலியா பிறந்தது. பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்திருந்த சோமாலியாவை, இனக்குழு உணர்வை ஒதுக்கி ஒற்றை சோமாலியாவாக மாற்ற பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார் சாத் பர்ரெ.