இந்த இரண்டாம் உலகப் போரின் வெற்றிக் கூட்டணி நாடுகளில் ரஷ்யா சித்தாந்த ரீதியாக மற்ற மூவரைக் காட்டிலும் வேறுபட்டு கம்யூனிஸம் மற்றும் சர்வாதிகார ஆட்சி முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. மற்றவர்கள் சந்தை பொருளாதாரம், முதலாளித்துவம் மற்றும் மக்களாட்சியை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கு முன் பாசிசமும், நாசிசமும் ஒருங்கிணைந்து செலுத்திய அதிகாரம் ஒருபுறமும், அவற்றை எதிர்க்கும் நாடுகள் மறுபுறமும் இருந்து கொண்டு ஆதிக்க போட்டி நடத்தினர். ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பிறகு நாசி ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் தங்கள் ஆதிக்கத்தை இழந்தனர். உலக அரசியலில் இனி இவர்களை வீழ்த்திய
...more