எல்லா பிரச்சனைகளுக்கும் Consensus Politics (பொதுக்கருத்து எட்டப்பட்ட அரசியல்) எனும் அடிப்படையில் அனைவரும் ஒத்துக் கொள்ளும் முறையில் தீர்வு காணப்படுகிறது. இங்கு கூட்டாட்சி முறையில் அரசாட்சி மிளிர்கிறது இது போக, Direct Democracy (நேரடி ஜனநாயகம்) என்கிற முறை இருக்கிறதாம். Direct Democracy முறையில், மக்கள் நினைத்தால், இந்த அவைகளில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு எதிராக பொது வாக்கெடுப்புகள் (Referendum) நடத்தலாம், தீர்மானம் கொண்டு வரலாம், கையெழுத்து இயக்கம் மூலம் சட்டங்களை கேள்விக்கு உட்படுத்தலாம். இங்கே மக்களென்றால் ஆளும் ஆட்சியாளர்களின் சட்டங்களுக்கு வளைந்து, நெளிந்து, சமாளித்து வாழ வேண்டிய
...more