அங்கும் மத்திய அரசு உண்டு. ஒவ்வொரு காண்டோனின் மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கூடவே மேலவை என்கிற Upper Houseக்கும் ஒவ்வொரு காண்டோன்களும் தலா இரு உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். (இதில் ஒரு உறுப்பினர் மட்டும் கொண்ட மிகச் சில காண்டோன்களும் உண்டு) இதிலும் இவர்களுக்குள் ஒரே முறை இல்லை பாருங்கள். இது தவிர உள்ளாட்சி நிர்வாகமும் உண்டு. இந்த இரு அவையிலுள்ள தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏழு பேரை நான்கு பெரிய கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி என எதுவும் கிடையாது. நான்கு கட்சியிலிருந்து
...more