இப்படியான பகை உணர்வை அகற்றி ஒரே சோமாலி என்கிற உணர்வுக்குள் கொண்டு வர கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தையும் குரானையும் கலந்த Scientific Socialism என ராணுவ சர்வாதிகார அரசு முயன்றது. அந்த அரசு தன் தவறான புரிதலாலும், கொள்கையை செயல்படுத்திய விதத்தினாலும் அதில் அங்கம் வகித்தவர்களின் பேராசையினாலும் அவர்கள் முன்னெடுத்த நிர்வாக, பொருளாதார மற்றும் வெளியுறவு முடிவுகளாலும் அரசாட்சியை தொடர முடியாமல் வீழ்ந்தனர்.