பண்டைக் காலம் முதல் கடல் வணிகத்தின் இணைப்புச் சங்கிலியாக இந்த நிலப்பரப்பு இருந்திருக்கிறது. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சோமாலியா நிலப்பரப்பு மிக முக்கியமானது. அக்காலத்தில் சோமாலியாவை அரேபியர்கள் நிர்வகித்து வந்தனர். பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி இந்த நிலப்பரப்பை தங்களுக்குள் பிரித்து காலனியாக்கி சக்கையாக்கினர்.