இந்த நம்பிக்கையில் தான் அக்டோபர் 17, 1917ல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி தோன்றியது.இப்புரட்சியின் விளைவாக அந்நாட்டில் பொதுவுடைமை தத்துவம் மலர்ந்தது. ஒரு வரியில் இந்த நிகழ்வை நாம் எளிதாக கடந்துவிட முடியாது - ஏனெனில் ரஷ்யப் புரட்சி என்பது மொத்த உலகையும் மாற்றி அமைக்க கூடிய வல்லமை கொண்ட நிகழ்வு. இன்றுவரை அதன் தாக்கம் இருக்கிறது. அது இன்னும் வருங்காலங்களிலும் இருக்கும். உழவர்கள் நிலக்கிழார்களுக்கு அடிமையாக இருக்கும் நிலை, உழைப்பவர்களுக்கு நிலமற்ற நிலை, பொருளாதார ஏற்ற தாழ்வு, ஆண்டான் -அடிமை முறை என்கிற அனைத்து முறைகளையும் நீக்கி புதிய சமுதாயம் படைத்த புரட்சிஅது. மார்க்ஸின் மூலதனம்
...more