யுகோஸ்லாவிய சிதறல் என்பது இப்படி பல தேசமாக பிரியும் முறையில் பலவிதங்களில் மாறுபட்டது. இது எந்த ஒரு வெளிநாட்டின் உந்துதல் இன்றி நடந்தேறியது. தனியாக இதற்காக போராட என ஆயுதம் ஏந்திய போராட்ட இயக்கங்களும் கிடையாது. குறிப்பிட்ட வளங்களை முன்வைத்து அதை சொந்தம் கொண்டாட நடந்ததும் இல்லை. இது முழுக்க முழுக்க அதிகாரத்தில் உள்ளவர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. ஆளும் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டு மாற்றத்தாலே நடந்தது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது, இந்த அளவுக்கு சகிப்புத் தன்மையும், மற்ற இன குழுக்கள் மீது வெறுப்பும் துவேசமும் மனிதர்களுக்குள் சாத்தியமா என்கிற அதிர்ச்சியையும் தருகிறது.