ச்சூ - என்றல் போ (ச்சூ என நாம் விலங்கினத்தை விரட்ட பயன்படுத்தும் ஒலி), மால் என்றால் பால் அதாவது போய் பால் கற என்கிற அர்த்தம். இந்த 'சூமால்' தான் பின்னர் சோமாலியா ஆனதாம். கால் நடைகள் வளர்க்க தகுந்த நிலப்பரப்பு. இன்னும் அகண்ட பாலைப் பகுதி. செங்கடலும் இந்தியக் கடலும் தரும் வளமான மீன்கள், காலம் காலமாக இந்த இயற்கை வளத்தை அளவாக பகிர்ந்து வாழத்தெரிந்த அறிவான, வலுவான மக்கள். The most tall and handsome people எனக் குறிப்பிடப்பட்ட இனக்குழுக் கூட்டமே சோமாலி மக்கள்.