வளமிக்க தேசங்கள் சபிக்கப்பட்டவை என்பார்கள். மண்ணுக்கடியில் இருக்கும் தாது வளங்கள், எண்ணெய் வளங்கள் போன்றவை அளவுக்கு மீறி ஒரு நாட்டில் இருந்தால், அந்த வளங்களே அந்த நாட்டிற்கு சாபமாகி வளப் போட்டிக்குள் சிக்கி, அந்நாட்டு மக்கள் துயரப்படுவார்கள் என்பதே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல தேசங்களின் வரலாறு. இயற்கை வளங்கள், அதிலும், வைரங்கள் அதிகம் கிடைக்கும் நாடான போட்ஸ்வானா. ஆப்பிரிக்க நாடுகளிலேயே மிக முன்னேறிய நாடாக, ஜனநாயக நாடாக, அமைதியான நாடாக மக்கள் தங்கள் விருப்பப்படி வாழக் கூடிய நாடாகத் திகழ்வது எப்படி?