ஆங்கிலேயர் ஆட்சியின் போது போட்ஸ்வானாவின் முக்கிய எட்டு இனக்குழுக்களே பிரதான குழுக்கள். அவர்களுக்கே போட்ஸ்வானா சொந்தம் என்கிற நடைமுறை இருந்தது. அதே நடைமுறையை சுதந்திரத்திற்கு பிறகு தன் அரசியல் சாசனத்திலும் இணைத்தே புதிய நாட்டை உருவாக்க ஆரம்பித்தார்கள். இந்த எட்டு பெரிய இனக்குழுக்களைத் தவிர்த்து இன்னும் பல சிறுபான்மை இனக்குழுக்களும் போட்ஸ்வானாவில் இருந்த போதும் எட்டு குடிகளுக்கு மட்டுமே முதன்மையான அங்கீகாரம் கொடுத்தது கண்டிப்பாக போட்ஸ்வானா சமூகத்தில் இனக்குழுக்களிடையே போட்டியையும் சந்தேகத்தையும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல உருவாக்கியிருக்க வேண்டும்.