எஸ்தோனியாவில் ரஷ்யமயமாக்கல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டு உலகப் போரின் பொழுதும் ஜெர்மானியராலும் ரஷ்யாவாலும் பல முறை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது எஸ்தோனியா. கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக்கப்பட்டு தன் சுயத்தை இழந்து நின்றது. தன் லாபத்திற்காக ரஷ்யா, எஸ்தோனியாவை ஜெர்மானியர்களுக்கு பலியாக கொடுக்கவும் செய்தது. அனைத்து வகையான சுய அதிகார மறுப்பு செயல்களை எதிர்கொண்டது எஸ்தோனியா. ஆயுத போராட்டங்கள் மூலம் தன் சுய அதிகாரத்தை நிறுவும் முயற்சியிலும் ஈடுபட்டது எஸ்தோனியா, ஆனாலும் துப்பாக்கியை விடவும் எஸ்தோனியர்களை ஒரே தேசமாக்கியது அவர்களின் பாடல்களே, ஒன்றாய் இணைந்து பாடினார்கள்....
...more