கார்ல் மார்க்ஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட லெனின் புதிய மார்க்ஸிய கொள்கையை முன்னிறுத்தினார். நன்கு தொழில்மயமாக்கப்பட்ட நிலையில்தான் சமுதாயம் சமத்துவத்தை நோக்கி நகரத் துவங்கும். அதுவே அடுத்து அடுத்து மாற்றமடைந்து, ஏற்றத் தாழ்வு இல்லாத கம்யூனிச சமூகமாகவும், எல்லோருக்கும் பொதுவான சமூகமாகவும் மலரும் என்பது மார்க்ஸின் கருத்து. ஆனால் லெனின் மார்க்ஸின் அனைத்து தத்துவங்களையும் உள்வாங்கிக் கொண்டு, பொதுவுடமை சர்வாதிகாரத்தின் மூலமாகக் கூட இப்படியான ஒரு பொதுவுடமைச் சமூகத்தை கட்டமைக்க முடியும் என நம்பினார்.