ஆதிகாலம் முதல் இன்றைய எஸ்தோனிய நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலப்பரப்பை மாவால் (Maavaald) என்றும் அங்கு வாழுகிறவர்களை மாரவஸ் (Maarahvas) என்றும் அழைக்கப்பட்டனர். Maa மா என்றால் அம்மா, தாய் என்கிற அர்த்ததில் அதுவே நிலம் நாடு என்கிற அர்த்தத்தையும் தரக்கூடிய வகையில் தாங்கள் வாழ்ந்த நாட்டையும் அழைத்தனர். அவர்களுக்குள் பல குழுக்களாய் பிரிந்து சண்டையும், சமாதானமுமாய் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் கடவுள் யார் என்பதை குறித்து இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. 13 ஆம் நூற்றாண்டு வரை இவர்களின் வரலாறு குறித்த எந்த விவரமான குறிப்புகளும் இல்லை. இவர்களுக்கென தனியாக
...more