செர்பியாவும் தனி தேசமானது. இதே போல் கிரேக்கம், போஸ்னியா, மாண்டினீக்ரோ மற்றும் பல்கேரியாவும் தங்களின் நிலப்பகுதியை உறுதி செய்து கொண்டனர். இந்த நிலப்பகிர்வின் பொழுது கொசாவாவை செர்பியர்கள் தங்களுடன் எடுத்துக் கொண்டனர் - அல்லது அளிக்கப்பட்டது. அல்பேனிய இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலும் கூட கொசோவா நிலப்பகுதியை செர்பியர்கள் தங்களதாக்கினர். அதாவது அல்பேனியர்களுக்கென தனி நாடு, அது அல்பேனியா. ஆனால் அதன் அருகிலே இருக்கும் நிலப்பரப்பில் வாழும் அதே அல்பேனியர்கள் அதிகம் உள்ள கொசோவா செர்பியாவிடம் இணைக்கப்பட்டது. இதுதான் சிக்கலின் ஆரம்பம்.