19வது நூற்றாண்டு நவீன காலத்தின் ஆரம்பம். எஸ்தோனியர்களுக்கு அவர்களின் நிலம் சரியான நேரத்தில் அவர்கள் கைகளுக்கு கிடைத்தது எனலாம். நவீனமயமாக்கல் காலத்தில் அடிமையாக இருக்காமல் மெல்ல மெல்ல மீண்டு வரும் காலமாக அமைத்துவிட்டது. அதுவரை வேளாண்மை சமூகமாக இருந்த எஸ்தோனியா நிலப்பிரபுத்துவ காலத்து அதிகார அடுக்குகளை தானே கலைத்தது. அதற்கு முன்னுதாரணமாக பல ஐரோப்பிய நாடுகள் இருந்ததும் காரணமே. இப்படியான சூழல் இந்தியாவுக்கு என்றுமே ஏற்படவில்லை என்பது வருத்தமே. நவீன காலத்திலும் அடிமைத்தனமாகவே இருந்திருக்கிறோம். இந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் பல தேசங்கள் தோன்ற ஆரம்பித்தன. மொழியால், மொழி குடும்பத்தால், இனத்தால்
...more