இந்திய தேசத்தின் ஒரு மாநிலம் போல சோவியத் யூனியனின் ஒரு ஒன்றியமாக இருந்தது இந்த நிலப்பரப்பு. 1990களில் சோவியத் சோஷியலிச ரிபப்ளிக் முடிவுக்கு வந்த பொழுது தன்னை தனி நாடாக உலகுக்கு அறிவித்தது. எஸ்தோனியா !! ஆச்சர்யம், அதிசயம் என இதைவிட வேறு எதைச் சொல்ல முடியும். ஆள்கிறவன் யாராக இருந்தாலும், எத்தனை இடர்பாடுகள் மத்தியிலே பிறந்து இறந்திருந்தாலும், விடுதலை, நம்பிக்கை என்கிற அர்த்தம் புரியாமலேயே வாழ்ந்திருந்தாலும், இவர்களை ஆண்டவர்களாலும், அவர்களின் மொழியாலும், மதத்தாலும், தத்துவத்தாலும், படையாலும், அதிகாரத்தாலும், “நாம் எஸ்தோனியர்கள்” என்கிற உணர்வை மட்டும் இவர்களிடமிருந்து எடுக்கவே முடியாது
...more