அன்று கிழக்கு ஜெர்மானிய அதிகாரி ஒருவர் கலந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த பயணத் தடையைக் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அவரும் 'பயணத்தடை தளர்த்தப்படும், கூடிய சீக்கிரத்தில்' என பதில் சொல்லிவிட்டார். இந்த பதில் காட்டுத் தீ போல் கிழக்கு ஜெர்மனியெங்கும் 'இனி பயணத்தடை கிடையாது' எனப் பரவிவிட்டது. அவ்வளவுதான், கிழக்கு பெர்லின் நகரத்தில் வாழும் ஜெர்மானியர்கள் கும்பல் கும்பலாக நகரத்துக்கு நடுவில் இருந்த சுவற்றை நோக்கி படையெடுத்தனர். காவலுக்கு இருந்த காவலாளிகளிடம் 'இனி எந்தத் தடையும் கிடையாது, கதவைத் திற' எனக் கூவினார்கள். காவல் துறைக்கும், ராணுவத்தினருக்கும் அப்பொழுது என்ன
அன்று கிழக்கு ஜெர்மானிய அதிகாரி ஒருவர் கலந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த பயணத் தடையைக் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அவரும் 'பயணத்தடை தளர்த்தப்படும், கூடிய சீக்கிரத்தில்' என பதில் சொல்லிவிட்டார். இந்த பதில் காட்டுத் தீ போல் கிழக்கு ஜெர்மனியெங்கும் 'இனி பயணத்தடை கிடையாது' எனப் பரவிவிட்டது. அவ்வளவுதான், கிழக்கு பெர்லின் நகரத்தில் வாழும் ஜெர்மானியர்கள் கும்பல் கும்பலாக நகரத்துக்கு நடுவில் இருந்த சுவற்றை நோக்கி படையெடுத்தனர். காவலுக்கு இருந்த காவலாளிகளிடம் 'இனி எந்தத் தடையும் கிடையாது, கதவைத் திற' எனக் கூவினார்கள். காவல் துறைக்கும், ராணுவத்தினருக்கும் அப்பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிகாரிகளும் குழப்பத்தில் இருந்தனர். மக்கள் அனைவரும் மெல்ல சுவற்றின் மீது ஏற ஆரம்பித்தனர். சிலர் சுவற்றை சம்மட்டியால் ஓங்கி அடித்து தகர்க்க ஆரம்பித்துவிட்டனர். கட்டுக்கடங்காத வகையில் வந்த மக்களின் உணர்ச்சி பெருக்கத்தை எதிர்க்க முடியாமல், பெர்லின் தடை சுவற்றின் வாசல்கள் காவலாளிகளால் திறக்கப்பட்டது. பெர்லின் சுவர் அன்று தகர்க்கப்பட்டது. 1961ல் கட்டப்பட்டு முப்பது வருடங்களாக இரு ஜெர்மனியர்களைப் பிரித்த அந்தச் சுவர் 1989ல் தகர்க்கப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிகாரி ஒருவர் சொன்ன பதிலை தவறாகப் புரிந்து கொண்டு செய்தியாக கொண்டு சென்றன ஊடகங்கள். தங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் செய்தியை புரிந்து கொண்டனர் மக்கள். அதைத் தொடர்ந்து நடந்த மக்கள் எழுச்சியினால் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. பெர்லின் சுவர் இடிப்பு என்பது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வு என்றாலும் அதன் பின்னணியில் இப்படி ஒரு சின்ன தவறு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஹிட்லர் தன் ஊடக பிரச்சாரத்தை கொண்டு ...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.