ஐரோப்பியர்களிடமிருந்த அதிகாரத்தை பெற்ற குழுக்கள் தங்கள் நாட்டை தங்களது இனக்குழுவின் கலை, கலாச்சாரம், மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்கிற ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக ஆக்கவே விரும்பினர். ஒற்றைத் தன்மை என்பதே கிட்டத்தட்ட அனைத்து காலனி நாடுகளின் முனைப்பாக இருந்தது. ஒற்றை மொழி, கலாச்சாரம் கொண்ட நாடு பலமான நாடாகவும் இருக்கும் என்கிற நம்பிக்கையை முன்வைத்தாலும் பெரும்பாலும் இப்படியான ஒரு இனக்குழுவின் ஒற்றைமய முயற்சி பல ஆப்பிரிக்க நாடுகளில், எதிர்ப்பையும் போட்டிகளையும் போர்களையும் கொண்டு வந்தது என்பது வரலாறு. இதே போன்ற ஒற்றை மயத்தைத்தான் போட்ஸ்வானா தலைவர்களும்
...more