இந்த புரட்சி ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ரஷ்ய சாம்ராஜ்யத்தில் ரஷ்யர்களைத் தவிர்த்து பல இனக்குழுக்கள், மொழிக் குழுக்கள் இருந்தனர். ஆனாலும் அனைவரும் மொழி மறந்து, இனம் மறந்து, வேற்றுமைகள் மறந்து, உழவர்கள் நாம், தொழிலாளர்கள் நாம் என ஒன்றிணைந்து வென்றெடுத்த புரட்சி இது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நிலப் பகுதியே சோவியத் யூனியன். கிட்டதட்ட 15 மாநிலங்கள் கொண்ட ஒன்றியம் இது.15 மாநிலங்கள் என நாம் கூறினாலும் உண்மையிலேயே இவை அனைத்தும் ஒவ்வொரு நாடுகளுக்கு சமம். ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, கலை, உணவு, கலாச்சாரம், உடை வேறுபாடுகள் உண்டு. மத நம்பிக்கையிலும் வேறுபாடுகள் உண்டு. ரஷ்ய
...more