இந்த நேரத்தில்தான் இந்த சோவியத் யூனியனில் புதிய மறுமலர்ச்சியைக் கொண்டு வர அதிகாரத்துக்கு வந்தார் கோர்ப்பசேவ் எனும் ரஷ்ய அதிபர். இவர் 1985ல் பதவி ஏற்றப் பின் படிப்படியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வெளிப்படைத் தன்மை, தனியார் நிறுவனங்கள் போன்றவற்றைக் கொண்டு வந்தார். விளைவு, இதுவரை அடக்குமுறைக்குள் இருந்த மக்கள் இந்த மாற்றங்களைப் பயன்படுத்தி எதிர் அரசியல் செய்தார்கள். குறிப்பாக, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும், ரஷ்யாவும் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய ஒப்பந்தத்தை வெளிக் கொண்டு வந்தனர். இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தில் ரஷ்யாவும் - ஜெர்மனியும் தங்களுக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இந்த நேரத்தில்தான் இந்த சோவியத் யூனியனில் புதிய மறுமலர்ச்சியைக் கொண்டு வர அதிகாரத்துக்கு வந்தார் கோர்ப்பசேவ் எனும் ரஷ்ய அதிபர். இவர் 1985ல் பதவி ஏற்றப் பின் படிப்படியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வெளிப்படைத் தன்மை, தனியார் நிறுவனங்கள் போன்றவற்றைக் கொண்டு வந்தார். விளைவு, இதுவரை அடக்குமுறைக்குள் இருந்த மக்கள் இந்த மாற்றங்களைப் பயன்படுத்தி எதிர் அரசியல் செய்தார்கள். குறிப்பாக, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும், ரஷ்யாவும் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய ஒப்பந்தத்தை வெளிக் கொண்டு வந்தனர். இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தில் ரஷ்யாவும் - ஜெர்மனியும் தங்களுக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். (1939 Molotov- Ribbentrop Pact.) அதாவது ஜெர்மனி ரஷ்யா மீதும், ரஷ்யா ஜெர்மனி மீதும் எக்காரணத்தைக் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதே. ஜெர்மனிக்கும் - ரஷ்யாவுக்கும் இடையிலான பகுதிகளை ஜெர்மனியும் - ரஷ்யாவும் எந்த பிரச்சனையின்றி ஆக்கிரமித்துக் கொள்ளலாம். முதலாம் உலகப் போர் முடிவில் இழந்த இடங்களை இவ்வாறு இருவரும் மீட்டு கொள்வதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ரகசிய ஒப்பந்தம், அதே உலகப் போரில் ஜெர்மனியால் மீறப்பட்டது. ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்தது என்றாலும், இந்த ரகசிய ஒப்பந்தம் 1980களில் அரசியலாக்கப்பட்டது. குறிப்பாக, ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ருமேனியா, போலந்து, மற்றும் பால்டிக் நாடுகள் எனும் லித்துவேனியா, லாத்வியா, எஸ்தோனியா போன்ற நாடுகள், ரஷ்ய - ஜெர்மானிய ரகசிய ஒப்பந்தம் தங்கள் நாட்டை தங்களிடம் கேட்காமலேயே ஜெர்மனியும் ரஷ்யாவும் பங்கு போட்டுக் கொண்டன என்று குற்றம் சாட்டத் தொடங்கினர். இது அவர்களை பல விதத்தில் பாதித்தது, பல உயிர...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.