முதலாம் உலகப் போர் 1919ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து கூட்டணி ஜெர்மனிய கூட்டணியை தோற்கடித்தது. தோற்கடித்த ஜெர்மனியை என்ன செய்யலாம் ? எப்படி இன்னோரு முறை ஜெர்மனியர்கள் ஐரோப்பாவை கைப்பற்றாமல் தடுப்பது என்பதைக் குறித்து செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது. Treaty of Versailles என்கிற ஒப்பந்தம் ஜெர்மனியர்கள் மீது திணிக்கப்பட்டது. அதன் மூலம் ஜெர்மானியர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொருளாதாரத் தடை, ராணுவத் தடை என பல தடைகள் போடப்பட்டது. ஜெர்மனியின் ஆப்பிரிக்க காலனிகளை பிரான்சும் இங்கிலாந்தும் பிடிங்கிக் கொண்டன. இதைத் தவிர போருக்கான செலவு
...more