இப்படியான மாற்றங்கள் ஐரோப்பா முழுக்க நடந்து கொண்டிருந்தது. புதிய தேசங்கள் உருவாகின. மொழி, கலாச்சாரம் என்கிற பெயரில் ஒன்றிணைந்து தேசமாக்கினார்கள். பல்வேறு தேசங்கள் இனம் மொழி அடிப்படையில் உருவாகிக் கொண்டிருந்த வேளையில் எஸ்தோனியாவோ எந்த அடையாளமும் இன்றி the country people என்றே அழைக்கப்பட்டனர். பண்ணை முறை மெல்ல மெல்ல மாறிய பொழுது, கிடைத்த உரிமைகளை வைத்து கல்வியும், நிலங்களை உடமையாக்கிக் கொள்ளவும் துவங்கினர் எஸ்தோனியர்கள். மெல்ல மெல்ல சிறிய நடுத்தரவர்கம் உருவாக ஆரம்பித்தது. இவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினார்கள். மொழியால் இனத்தால் ஒன்றாகி தேசங்களாகிய
...more