இன்றைய எஸ்தோனிய நிலப்பரப்பை ஜெர்மானியர்கள் லோவேனியா என அழைத்தனர். பூர்வ குடிகளை people of land/ country என்றே அழைத்து வந்தனர். இதை ஏன் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் இப்படி வெளியிலிருந்து வந்தவர்கள் பூர்வ குடிகளுக்கு, அவர்களுக்கு புரிந்ததை வைத்து ஏதாவது பெயர் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள், பின்னர் அதுவே நிலைத்து நிற்கும். அது கூட எஸ்தோனியாவை பொருத்தவரை இல்லை என்பதைச் சொல்லத்தான்.